க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
திருவண்ணாமலை அருகே கொலையான முதியவரின் உடலை கண்டு பிடிக்க முடியாமல் 12 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் திணறி வருகின்றனர். உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த பலராமன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, அதே கிராமத்தில் உள்ள ரங்கநாதன் என்பவரின் செங்கல் சூலையில் வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது விசாரணை மேற்கொண்ட போலீசார், சந்தேகத்தின் பேரில் ரங்கநாதன் மற்றும் சிவலிங்கம் ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் இருவரும் குடிபோதையில் முதியவரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் முதியவரின் உடல் குறித்து கேட்ட போது, அவர்கள் உடலை ஏரி, குளம், கிணற்றில் வீசி விட்டதாக மாறி மாறி பதில் அளித்தனர். இதனால் உடலை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...