திருப்பூர்: செய்தியாளரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கால் முறிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் தடுக்கி விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.     பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு மீது மர்மநபர்கள் கடந்த 24 ம் தேதி கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் தொடர்பாக தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் பிரவீன், சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடமும், விசாரணை மேற்கொண்டபோது, தடுக்கி விழுந்ததில் குற்றவாளிகளுக்கு கால் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day