திருப்பூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் வீட்டில் கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடுமலையை அடுத்த பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். தனியார் பஸ் ஓட்டுநரான இவர் தனது குடும்பத்துடன் கோவில் சென்றதாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் காரில் வந்து, பிரபாகரன் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகை, 20,000 ரொக்கப்பணத்தை திருடி சென்றுள்ளனர். பிரபாகரன் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த வீட்டின் பூட்டு உடைந்திருப்பதை பார்த்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day