சாலையில் சென்ற காரை தாக்கிய காட்டு யானை

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சாலையில் வந்த காரை காட்டு யானை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கூடலூர் நகரில் உள்ள தேயிலை தோட்டத்தில் புகுந்து சுற்றித்திரிந்த 2 காட்டுயானைகளை, அங்கிருந்த மக்கள் கூச்சலிட்டு விரட்ட முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை தேயிலை தோட்டத்தில் இருந்து சாலைக்கு ஓடி வந்தது. அப்போது அவ்வழியாக வந்த காரை ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், அதிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். காட்டுயானை சுற்றித்திரிவதால் அப்பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையில் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் யானை, காரை தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Night
Day