திருச்சி: கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழ் எரிந்த நிலையில் பெண் சடலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழ் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத வகையில் பெண் ஒருவர் தலை, கை கால் எரிந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையான பெண் யார் என்பது குறித்தும், கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

varient
Night
Day