திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

 திருச்சி விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சி வந்த விமான பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகிக்கும் விதமாக, உடைமையில் மறைத்து கடத்திவரப்பட்ட பயணியிடம் இருந்து சுமார் 9.82 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சா போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 10 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day