திமுக பிரமுகரின் பேரனின் ஜாமின் மனு தள்ளுபடி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணாநகர் பகுதியில் சொகுசு கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை செய்த வழக்கில் திமுக பிரமுகரின் பேரன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நித்தின்சாய் மீது கடந்த மாதம் 29 ஆம் தேதி  கார் ஏற்றி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் திமுக பிரமுகரின் பேரன் சந்துரு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சந்துரு மனு தாக்கல் செய்தார். வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை தொடக்க கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, சந்துரு தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Night
Day