மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்படுவதாகவும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.

Night
Day