இமாச்சலப்பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு - சண்டிகர் - சிம்லா தேசிய நெடுஞ்சாலை மூடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அண்டை மாநிலமான இமாச்சலப்பிரதேசத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

அம்மாநிலத்தின் கின்னாரில் கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு டாங்லிக் வடிகால் மீது இருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சண்டிகர் - சிம்லா தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

இமாச்சலப்பிரதேசம் கின்னார் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய கைலாஷ் யாத்ரீகர்களை இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையினர் மீட்டனர். கின்னார் கைலாஷ் யாத்திரை பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், டாங்லிக் வடிகால் மீது இருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து கயிறு மூலம் 413 யாத்ரீகர்களை எல்லை காவல் படையினர் மீட்டனர். 


Night
Day