எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும்
சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்ம் 7வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலி தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்த விளம்பர திமுக அரசு, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் அதனை நிறைவேற்றவில்லை. மாறாக 10 ஆண்டுகளாக பணியாற்றிவந்த தூய்மை பணியாளர்களை தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்ற விளம்பர அரசு நிர்ப்பந்தித்துள்ளது.
துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், திமுக அரசு அளித்த வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த 1ஆம் துதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் அமைச்சர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தற்காலிக தூய்மை பணியாளர்களின் போராட்டம் 7வது நாளாக இன்றும் நீடிக்கிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் போராட்டம் நடத்தி வருவதாகவும், பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
சென்னை 5 மற்றும் 6வது மண்டலங்களை சேர்ந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் இந்த தொடர் போராட்டம் காரணமாக ராயபுரம், எழும்பூர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன. குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, விளம்பர திமுக அரசு தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.