தபால் துறை காசாளர் மீது கையாடல் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தியாகராயநகர் தபால் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காசாளர், 25 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக பாண்டிபஜார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தியாகராய நகர் தபால் நிலையத்தில் மணிகண்டன் என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம், துணை தபால் நிலையங்களுக்கு பர்னிச்சர் பொருட்கள் வாங்குவதற்காக 25 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த நிதியை கையாடல் செய்ததாக தபால் துறை அதிகாரிகள் பாண்டிபஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day