எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே தனியார் பள்ளியில் இரு மாணவர்களை அரிவாளால் வெட்டிய ஒன்பதாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
டேனாவூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இரு மாணவர்களிடையே முன்விரோதம் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவ்விரு மாணவர்கள் இடையே இருநாட்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வடுகச்சி மலையைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அரிவாளை புத்தகைப்பையில் மறைத்து வைத்து பள்ளிக்கு எடுத்து வந்தான். அப்போது தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவரை முதுகில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த மற்றொரு மாணவரையும் கையில் வெட்டியுள்ளார். வெட்டுக்காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வடுகச்சி மலையைச் சேர்ந்த மாணவரை கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.