காலாண்டு விடுமுறையில் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காலாண்டு விடுமுறையில் சிறப்பு பாட வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் இன்று நிறைவடைகின்றன. நாளை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதை சுட்டிக்காட்டி தனியார் பள்ளி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். விடுமுறை நாட்களில் விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day