க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
துபாயில் இருந்து கொடுத்துவிடப்பட்ட தங்கத்தை கொண்டு வந்து சேர்க்காததால் தங்கம் கொண்டு வந்தவரின் தம்பியை கடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சையை சேர்ந்த சுபாஷ் என்பவர் துபாயில் இருந்து தமிழகம் வரும்போது அங்கிருந்த சிலர் 900 கிராம் தங்கத்தை கொடுத்து நாகையில் உள்ள ரஹினா பேகத்திடம் ஒப்படைக்கும்படி கூறியுள்ளனர். கடந்த 22ம் தேதி இந்தியா வந்த சுபாஷ் ஊர் திரும்பாததால், ரஹினா பேகம் ரவுடிகள் மூலம் அவரை தேடியுள்ளார். எங்கு தேடியும் சுபாஷ் கிடைக்காததால் அவரது தம்பி சுரேஷை கடத்திவிட்டு அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து சுபாஷ் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், விசாரணை மேற்கொண்ட போலீசார், கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து 8 பேரை கைது செய்தனர். தங்கத்துடன் மாயமான சுபாஷ் எங்கு உள்ளார் என்பது தற்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...