க்ரைம்
பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்லும் கவின் உடல்
பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்லும் கவின் உடல்கடந்த 27 ஆம் தேதி கவின் ஆ?...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பள்ளி தலைமை ஆசிரியை தரக்குறைவாக பேசியதால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டதாக குற்றம்சாட்டி, பள்ளி மாணவிகளும், பெற்றோரும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி நீவிகா 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வாலிபால் போட்டியில் மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியை, நீவிகாவை விளையாட்டுப் பயிற்சிக்கு அனுப்ப மறுத்ததுடன், மாணவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி நீவிகா, கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணவியின் பெற்றோரும், உடன் பயிலும் மாணவிகளும், பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்லும் கவின் உடல்கடந்த 27 ஆம் தேதி கவின் ஆ?...
கள்ளச்சந்தையில் மதுவிற்பனை படுஜோர்எவ்வித அச்சமுமின்றி கள்ளச்சந்தையில் ...