தமிழகம்
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்துநெல்லை : கோபாலசமுத்திரம் அடுத்த பிரான்சேரி...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தனியார் பேருந்து பட்டிக்கட்டில் தொங்கியவாறு சென்ற மாணவர்கள் அடிபட்டு துடிதுடிக்கும் காட்சி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள முத்தையா பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் பழனிராஜன், ஜசக் என்ற 2 மாணவர்கள், சுஷ்மிதா என்ற தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அப்போது, அத்தியாயநல்லூர் அருகே டோல்கேட்டை கடக்கும்போது இரும்பு கம்பியில் மோதி கீழே விழுந்தனர். இதில், இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இருவரும் விபத்துக்குள்ளாகி துடிதுடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்துநெல்லை : கோபாலசமுத்திரம் அடுத்த பிரான்சேரி...
கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 25 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போ?...