தமிழகம்
விபத்தை ஏற்படுத்திய திமுக MP யின் லாரி
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மணிமுத்தா அணையில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டதால், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாந்தபாளையம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இருநாட்களுக்கு முன்பு மணிமுத்தா அணைக்கு மீன்பிடிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. நெடுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். இந்நிலையில் அணை பகுதியில் ஆறுமுகம் உயிரிழந்து கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் ஆறுமுகத்தின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் பழைய சிறுவங்கூர் கிராமம் வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...