எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்கள் சென்னை, ரிப்பன் மாளிகை அருகே டெண்ட் அமைத்து 2வதுபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளம்பர திமுக அரசு எதிர்க்கட்சியாக இருந்தபோது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் தற்காலிக தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்துவதாக வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், தற்போது வரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என தற்காலிக தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி, தூய்மை பணிகளை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை தொடர்ந்து கையில் எடுப்பதை கண்டித்து ரிப்பன் மாளிகை முன்பாக டெண்ட் அமைத்து தற்காலிக தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய தூய்மை பணியாளர்கள் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினர்.