அண்ணன் - தம்பி கொலை - 5 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட கும்பலை தட்டி கேட்ட சகோதர்கள் இருவரை கொன்று புதைத்த சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டுகரை பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவருக்கு 6 குழந்தைகள் உள்ளநிலையில் மூத்த மகன் மாரிபாண்டி குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது தந்தை சின்னதுரை வீட்டுக்கு மாரி பாண்டி வந்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தந்தையின் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த சதீஷ், ரீதன், முனீஸ்வரன் உள்ளிட்டவர்கள் அமர்ந்து போதை பொருளை புகைத்து கொண்டு, தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மாரிபாண்டி, பார்வையற்ற சகோதரன் அருள்ராஜ் மற்றும் மூத்த சகோதரி மாரியம்மாள் ஆகியோர் அவர்களை தட்டி கேட்டுள்ளனர். இந்த சூழலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி அருள்ராஜ் மற்றும் மாரி பாண்டி ஆகிய இருவரும் அடுத்தடுத்து மாயமாகினர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் மாயமான சகோதரர்கள் இருவரும் கொன்று புதைக்கப்பட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து, இரட்டை கொலை சம்பவத்தில்  கொலையாளிகளை தேடி வந்த போலீசார் கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் ரிதன், முகமதுமீரான், சங்கர், முனீஸ்வரன், காளிராஜ் ஆகிய போதை ஆசாமிகள் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

Night
Day