தஞ்சாவூர் - 3 குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே மனைவி விட்டுச் சென்ற சோகத்தில் 3 குழந்தைகளை தந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுக்கூர் அருகே கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா. இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில் நித்யாவுக்கு, மன்னார்குடியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, தனது காதலருடன் சென்று விட்டார். 

இதனால், மதுபோதைக்கு அடிமையான வினோத்குமார் குழந்தைகளை வெறுத்து அடிக்கடி அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டிற்கு மீண்டும் குடிபோதையில் வந்த வினோத் குமார் தனது மகள்கள் மற்றும் மகனை தூக்கி வைத்து கொஞ்சுவது போல அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தானே மதுக்கூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

Night
Day