கரூர் பெருந்துயரம் - சேலம் தவெக மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபனிடம் SIT விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர், வேலுச்சாமிபுரத்தில் தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூரில் 7வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் இச்சம்பவம் குறித்து பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் தவெக பிரச்சார நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் இருந்த தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபனுக்கு அக்குழு சம்மன் அனுப்பிய நிலையில் அவர் விசாரணைக்கு வந்துள்ளார். இதேபோன்று பிரச்சார நிகழ்ச்சிக்காக சவுண்ட் சர்வீஸ் அமைத்துக் கொடுத்த ஆடியோ இன்ஜினியர்களும் விசாரணைக்கு வந்துள்ளனர்.
.

Night
Day