ஜாபர் சாதிக் குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெருங்குடியில் உள்ள,  ஜாபர் சாதிக்கின் குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ போதை பொருட்களை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் பறிமுதல் செய்தனர். இதற்கு மூலையாக செயல்பட்ட திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக் உட்பட 4 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்த நிலையில், ஜாபர் சாத்திக்கின் கூட்டாளியான சதா ஆனந்த் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக் குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்பி பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Night
Day