சேலம்: தலையில் கல்லை போட்டு மாற்றுத்திறனாளி பெண் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறுக்குப்பட்டி கிராமத்தில் வாய் பேச இயலாத மாற்று திறனாளி பெண் பெருமாயி, தனியாக வசித்து வந்தார். இவர் நேற்றிரவு வீட்டின் முன் உறங்கிக் கொண்டிருந்த போது மர்மநபர்கள் கல்லை போட்டு கொன்றுவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day