சேலம்: சூட்கேஸில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பாதையில் சூட்கேஸில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், கள்ளக்காதலன் உட்பட இருவர் சரணடைந்துள்ளனர். சுப்புலட்சுமி என்பவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தபோது, அங்கு திருவாருரைச் சேர்ந்த நடராஜன் என்பவருடன் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் கத்தாரில் இருந்து திரும்பி கோவையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். நடராஜன் சுப்புலட்சுமியின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தியிருந்த நிலையில், அதை அழித்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நடராஜன், சுப்புலட்சுமியை சுவற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, அவரது சடலத்தை சூட்கேசில் வைத்து ஏற்காடு வனப்பகுதியில் வீசியுள்ளார். கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், 
நடராஜன் மற்றும் அவரது உறவினர் கனிவழவன் ஆகியோர் ஏற்காடு கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர்.

varient
Night
Day