க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். புது வண்ணாரப்பேட்டையில் உள்ள தேசிய நகரை சேர்ந்த சிவா என்பவர் வீட்டின் அருகே 3 இளைஞர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பெண்கள் அதிகம் இருக்கும் இடத்தில் கஞ்சா புகைத்த இளைஞர்களை சிவா கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், சிவா வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குற்றச்செயலில் ஈடுபட்ட மனோஜ் என்பவரை கைது செய்து, தலைமறைவான கிச்சா, சூர்யா ஆகியோரை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...