க்ரைம்
கோவையில் பெண் கடத்தல் - காவல் ஆணையர் விளக்கம்
கோவை - இருகூரில் பெண் ஒருவர் அலறல் சத்தத்துடன் காரில் கடத்தப்பட்ட விவகாரம?...
சென்னையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். வியாசர்பாடியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர், கடந்த 8-ம் தேதி அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே தனது லாரியை நிறுத்தி வைத்த போது மறுநாள் காலை லாரி மாயமானது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், லாரி ஆந்திர மாநிலம் தடா வரை சென்றதை கண்டறிந்தனர். இதையடுத்து, ரகசிய தகவல்கள் மூலம் காரனோடை அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்பவரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் மற்ற 4 பேரையும் கைது செய்து லாரியை மீட்டனர்.
கோவை - இருகூரில் பெண் ஒருவர் அலறல் சத்தத்துடன் காரில் கடத்தப்பட்ட விவகாரம?...
சென்னை பட்டாளம் பகுதியில் பல மாதங்களாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வா...