க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
சென்னை நீலாங்கரையில் தொழில் அதிபர் வீட்டில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலாங்கரையை சேர்ந்த ப்ரஜஸ் குமார் கெளடியா என்பவர், கடந்த 20 வருடங்களாக சென்னை மற்றும் வெளிநாடுகளில் தொழில் செய்து வருகிறார். இவர், தனது குடும்பத்துடன் கடந்த 23ம் தேதி ஜெர்மனி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில், ப்ரஜஸ் குமார் கெளடியா வீட்டின் காவலாளி முதல் மாடிக்கு சென்று பார்த்தபோது, அறையின் கதவை உடைத்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...