க்ரைம்
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்பு
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் தலைமை செயலகத்தில் சோதனை மேற்கொண்டபோது, அது வதந்தி என தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரை கைது செய்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் சமீப காலமாக மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...