சென்னை : சிற்றுண்டி கடை நடத்தி வருபவர் மீது மதுபோதையில் தாக்குதல் - 3 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அபிராமபுரத்தில் தந்தை, மகனை கத்தியால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்.ஏ.புரம் கெனால் பேங்க் பகுதியில் கபாலி என்பவர் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடை முன்பு 4 பேர் பீர் பாட்டிலுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கபாலி அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள், கத்தி மற்றும் இரும்பு கம்பியால் கபாலியை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த கபாலி மகன் வசந்த் என்பவரை தாக்கியதுடன் செல்போனையும் பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக துரைப்பாக்கத்தை சேர்ந்த3 பேரை போலீசார் கைது செய்தனர். 

varient
Night
Day