சென்னை அம்பத்தூர் - போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெரம்பூரில் இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரம்பூர், பந்தர் கார்டன் தெருவில் சந்தேகிக்கும்படி நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அம்பத்தூரை சேர்ந்த ரவுடி அஜித் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அஜீத்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 3 ஆயிரத்து 300 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Night
Day