கேரளாவில் புதிய அணை - மதுரையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள அரசின் புதிய அணை கட்டும் நடவடிக்கைகளை கண்டித்து மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தை  விவசாயிகள் முற்றுகையிட்டனர். 

முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ள நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் புதிய அணைக்கட்டும் கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்திட வலியுறுத்தி முல்லை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தல்லாகுளம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day