"வெற்றிக் கூட்டணி அமைப்பேன்" - பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் உறுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பாமக பொதுக் குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் செயல்தலைவர் ஸ்ரீகாந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் மன்சூர், மாநில இளைஞர் சங்க தலைவர் தமிழ்குமரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 300 பேர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்  கூட்டணி குறித்து முடிவு எடுக்க டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு கொடுக்கப்பட்டுள்ளதால் கூட்டணி குறித்து நல்ல முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார். அந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று கூறிய ராமதாஸ், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை  நிச்சயம் பெறுவோம் என்று உறுதிபடக் கூறினார்.

தொடர்ந்து அன்புமணி குறித்து பேசிய ராமதாஸ், கனவில் வந்த தனது தாயார், பிள்ளையை சரியாக வளர்க்க தவறிவிட்டாய் என கூறியதாக வேதனையுடன் தெரிவித்தார். அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன் என கேள்வி எழுப்பிய அவர், தன்னை மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் குத்துவதாக நா தழு தழுத்த குரலில் தெரிவித்தார்.

Night
Day