நூற்றாண்டை தாங்கி நிற்கும் "ஆயிரம் ஜன்னல் வீடு"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செட்டிநாடு கட்டட கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் பழமைவாய்ந்த வீட்டின் நூற்றாண்டு விழாவை அதன் உரிமையாளர்களான 60 குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே வேலங்குடியில் சகோதரர்கள் பெரியணன், சுப்பையா ஆகியோர் இணைந்து சின்னான் இல்லத்தை கடந்த 1926 ஆம் ஆண்டு கட்டினர். 1922 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த வீடு, ஒரு ஏக்கரில் தரை தளம், முதல் தளம் என மொத்தம் 30 அறைகளுடன் பிரமாண்டமாக 1926 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. செட்டிநாடு கலை நயத்துடன் காணப்படும் இந்த வீடு இன்றளவும் கம்பீரமாக நிலைத்து அழகாக காட்சியளிக்கிறது. செட்டிநாடு கட்டிட கலையுடன், தரைக்கு புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ், சுவருக்கு இத்தாலியன் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளன. முகப்பு நிலை மற்றும் கதவுகளுக்கு பர்மா தேக்குகள் பயன்படுத்தியுள்ளனர். இந்த வீடு கட்டி 100 ஆண்டுகள் ஆனநிலையில், வீட்டை புதுப்பித்து நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாடினர். இதற்காக அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் இருந்த பெரியணன், சுப்பையா ஆகியோரின் வாரிசுகளான 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றனர்.

பெண்கள் அனைவரும் ஒரே வண்ணங்களில் சேலைகள் அணிந்து பிரம்மாண்டமான கேக் வெட்டியும், நடனமாடியும் உற்சாகம் அடைந்தனர். குழந்தைகளுக்கு போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

Night
Day