முட்டை விலை ரூ.8 ஆக உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் கோழி முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு முட்டை 8 ரூபாய்க்கு விற்பனையாவதால் ஏழை எளிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 7 கோடி வரை முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் சுமார் 1 கோடி வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. 70 முதல் 80 லட்சம் முட்டைகள் சத்துணவுக்காக கொடுக்கப்படுகிறது. மீதமுள்ள முட்டைகள் தமிழகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில், ஏற்றுமதி அதிகரித்துள்ளதாலும், கோழி தீவன விலையேற்றத்தின் காரணமாகவும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் முட்டை விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு முட்டைகளை கொண்டுவருவதற்கான லாரி செலவு, ஏற்றி இறக்கும் கூலி செலவு உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு முட்டை 7 ரூபாய் 50 காசுகளுக்கும், சில்லறை விற்பனையில் 8 ரூபாய்க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. முட்டை விலை உயர்வால் உணவகங்களில் ஆம்லேட், ஆஃப்பாயில் விலையும் அதிகரிக்கக்கூடும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Night
Day