சென்னையில் மருந்து குடோனில் தாய்ப்பால் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மருந்து விற்பனையகத்தில் அனுமதியின்றி விற்கப்பட்டு வந்த தாய்ப்பால் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதவரம் பகுதியில் புரோட்டின் பவுடர் விற்பனை செய்யும் கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் சென்னை முழுவதும் தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அரும்பாக்கத்தில் உள்ள மருந்து விற்பனையகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடையில் 30க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாராணையில், வெளிமாநிலங்களில் இருந்து தாய்ப்பால் கொண்டுவரப்பட்டு அதனை பவுடராக மாற்றி விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 50 மில்லி தாய்ப்பாலை 180 ரூபாயிலிருந்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட தாய்ப்பால் பவுடர்களை ஆய்வுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Night
Day