சிறுமியை துன்புறுத்திய தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மருமகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த பட்டியலின சிறுமியை அரக்கத்தனமாக கடும் சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின சிறுமியை கொடுமைப்படுத்திய திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் சைக்கோ மருமகள் மீதும் மகன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வீரமணி என்பவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தை நடத்த வழி இல்லாததால், அவரது மனைவியான செல்வி, குடும்பத்துடன் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தார். கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செல்வி வேலை செய்து வரும் நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் செல்வியை தொடர்பு கொண்டு வேலைக்கு பெண் வேண்டும் என கேட்டுள்ளார்...

அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படிப்பை முடித்த தனது 17வயதான மகளை வேலைக்கு அனுப்புவதாக செல்வி கூறியுள்ளார்.

இதையடுத்து 17 வயது சிறுமியை சென்னை திருவான்மியூரில் உள்ள பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இ. கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணனின் வீட்டில் வேலைக்கு சேர்த்துள்ளனர்.

சிறுமியை வேலைக்கு சேர்க்கக்கூடாது என்பது சட்டமாக உள்ள நிலையில், சட்டத்தை மீறி சிறுமியை வேலைக்கு சேர்ந்துள்ளார் திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன்.

வேலைக்கு சென்ற 2வது நாளிலேயே வேலையில் இருக்க பிடிக்கவில்லை என சிறுமி கூறிய நிலையில், அவரை மிரட்டியுள்ளார் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் சைக்கோ மருமகள் மார்லினா.

தாயை கொன்றுவிடுவோம், குடும்பத்தை அழித்துவிடுவோம் என மிரட்டி சிறுமியை வேலை செய்ய கட்டாயப்படுத்திய சைக்கோ மருமகள் மார்லினா, இரவு 2 மணி வரை சிறுமியை வீட்டு வேலை செய்யவைத்து கொடுமைப்படுத்தி உள்ளார்.

மிளகாய்த்தூளை கரைத்து குடிக்க வைத்து, வயிறு எரிவதாக சிறுமி கூறியபோதும் இரக்கமே இல்லாமல் தண்ணீரை கூட தர மறுத்து மிகக் கொடுமைக்கார சைக்கோவாக வலம் வந்துள்ளார் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மருமகள் மார்லினா.

நாள் முழுவதும் குழம்பு கரண்டியை வைத்து அடிப்பது, சிறுமியின் தலை முடியை வெட்டுவது, உடல் முழுவதும் சூடு வைப்பது, கத்தியால் அறுப்பது என சைக்கோவின் மொத்த உருவமாக வலம் வந்துள்ளார். திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மருமகள் மார்லினா.

தான் கொடுமைப்படுத்துவதுடன் இல்லாமல் கணவர் அண்டோ மதிவாணனிடம் துடைப்பத்தை கொடுத்து அடிக்க வைத்த சைக்கோ மார்லினா, ஆண்டோ சரியாக அடிக்கவில்லை எனக்கூறி துடைப்பத்தை வாங்கி அது பிய்ந்து போகும் வரை சிறுமியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.

கேமரா முன்பு சிறுமி காயங்களை காண்பித்த போது, சைக்கோ மருமகளும், திமுக எம்.எல்.ஏ. மகனும் மனித பிறவி தானா என்ற சந்தேகமே எழுந்துள்ளது.

கடந்த ஏழு மாதங்களாக சிறுமியை மிகக்கொடுரமாக சித்ரவதை செய்துள்ளார் சைக்கோ மருமகள் மார்லினா.

நடந்த கொடுமைகளை எல்லாம் வெளியில் சொன்னால் உங்கள் குடும்பத்தையே கொளுத்தி விடுவோம் என மிரட்டிய சைக்கோ மருமகள் மார்லினா, நாங்கள் ஆளுங்கட்சிக்காரர்கள், எது வேண்டுமானாலும் நடக்கும் என மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் தனது மகளை காணவேண்டும் என சிறுமியின் தாய் கேட்ட போது, காண்பிக்க முடியாது என கறார் காட்டியுள்ளது திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன் குடும்பம்.

மகளை பார்க்கவேண்டும் என தாய் செல்வி தொடர்ந்து அழுது அடம் பிடிக்கவே, ஏகப்பட்ட பேப்பர்களில் மிரட்டி கையெழுத்து வாங்கி விட்டு வீட்டில் கொண்டுபோய் சிறுமியை விட்டுவிட்டு வந்துள்ளது சைக்கோ மருமகள்-மகன் குடும்பம்.

வீட்டுக்கு வந்த பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமையை எல்லாம் மகள் கூறக்கூற, கண்ணீர் விட்டு கதறிய தாய் செல்வி மகளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ள சிறுமி, உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் புகார் தெரிவித்த நிலையில் சம்பவம் நடந்த இடம் திருவான்மியூர் என்பதால் போலீசார் திருவான்மியூர் மகளிர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

சிறுமியிடம் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்ய மறுத்த உளுந்தூர்பேட்டை போலீசார், திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகாரளிக்குமாறு அலைக்கழித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் செவ்வாய்க்கிழமை இரவு முதல் சிறுமியையும், அவரது தாயையும் தொடர்பு கொண்டு போலீசாரே புகார் தரவேண்டாம் என அழுத்தம் தருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பட்டியலின சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை போலீசாரை வைத்தே திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி தரப்பு மறைக்க முயல்வதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க குழந்தைகள் நல வாரியமும், மகளிர் நல ஆணையமும், தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Night
Day