கோவை: வெள்ளை பெட்ரோலை குடித்த 3 வயது குழந்தை பரிதாப பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் உக்கடத்தில் தண்ணீர் என நினைத்து வெள்ளை பெட்ரோலை குடித்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், கோவை தெப்பக்குளம் மைதானம் தியாகராய வீதியில் வசித்து வருகிறார். இவர் தனது 3 வயது குழந்தை இமன்ஷூவை சவுடம்மன் கோவில் பகுதியில் உள்ள அவரது உறவினரின் வாட்ச் கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் என நினைத்து வெள்ளை பெட்ரோலை குடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

varient
Night
Day