க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரத்தில் ரைஸ் மில் நடத்தி வரும் ராமச்சந்திரன் என்பவரது வீட்டின் கதவு நீண்டநேரம் திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, ராமச்சந்திரன், அவரது மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடல்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்கள் கடன்தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...