கைதி தப்பியோட்டம் - 2 காவலர்கள் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் போக்சோ வழக்கு குற்றவாளி தப்பியோடிய சம்பவத்தில் 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பகவதிராஜா. கடந்த 2021ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 15ம் தேதி முதல் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கு விசாரணைக்காக ஆயுதப்படை காவலர்கள் சரவணகுமார், பாலமுருகன் ஆகியோர் பகவதி ராஜாவை நெல்லை அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு இரவு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்த போது, பகவதி ராஜா தப்பித்து சென்றார். அவர் தேடப்பட்டு வரும் நிலையில், ஆயுதப்படை காவலர்கள் சரவணகுமார், பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்

Night
Day