காவலர் தாக்கியதில் மாற்றுத்திறனாளியின் கைமுறிவு - காவலர் பணியிடை நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பெட்டிக்கடை நடத்தி வரும் மாற்றுத்திறனாளியை போலீசார் தாக்கியதில் கை முறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சித்திரங்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தங்கவேல் நடத்தி வரும் பெட்டிக்கடையில் மது விற்பனை நடப்பதாக எழுந்த புகார் தொடர்பாக காவலர் லிங்குசாமி என்பவர் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டு மாற்றுத்திறனாளி தங்கவேலுவுக்கு கைமுறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாற்றுத்திறனாளி தங்கவேல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளியான தான், தற்போது கையில் அடிப்பட்டநிலையில், வாழ வழியில்லாமல் சிரமப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Night
Day