அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியான கோயில் பணியாளர் பாதுகாப்புக் கோரி டிஜிபி-க்கு கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியான கோயில் பணியாளர் பாதுகாப்புக் கோரி டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் தாக்கியது தொடர்பான வீடியோவை கோயில் பணியாளர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில், வீடியோ பதிவை எடுத்த கோயில் பணியாளர் தனக்கும், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கேட்டு டி.ஜி.பி.க்கு இ-மெயில் மூலம் கடிதம் எழுதி உள்ளார். அஜித்குமாரின் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா என்ற தனிப்படை காவலர் ரவுடிகளிடம் தொடர்பில் உள்ளவர் என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 28ம் தேதி அன்றே தன்னை காவலர் ராஜா மிரட்டியதாக தெரிவித்துள்ளார். எனவே, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

varient
Night
Day