எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை கவின் குமார் ஆணவ கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோரான 2 காவல் உதவி ஆய்வாளர்களையும் பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமியால் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் கே.டி.சி நகரில் மென்பொருள் ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இளம்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் சரணடைந்தார். இந்தநிலையில், கொலையில் இளம்பெண்ணின் தந்தை சரவணகுமார் தாய் கிருஷ்ண குமரி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கவின் குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டி அவர்களையும் கைது செய்யக்கோரி, உடலை வாங்க மறுத்து 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், நீண்ட விசாரணைக்குப் பிறகு காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணக்குமார் மற்றும் கிருஷ்ணகுமாரி மற்றும் சுர்ஜித் ஆகியோர் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், சரணக்குமார் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
வேறு சமூக பெண்ணை காதலித்த ஐ.டி. ஊழியர் கொலை வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதியை வாங்க மறுத்துள்ள கவினின் பெற்றோர், கொலைக்கு நீதி மட்டுமே வேண்டுமென்று தெரிவித்துள்ளனர். இளைஞர் கவின் கொலை வழக்கில் காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள 6 லட்சம் ரூபாயை நிதியை வாங்க கவினின் பெற்றோர் மறுத்துள்ளனர். தங்கள் மகனின் கொலைக்கு நிதி தேவையில்லை என்றும், நீதியே தேவை என்றும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷிடம் தெரிவித்தனர்.