கவின் ஆணவப்படுகொலை - நீதிக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கவின் ஆணவப் படுகொலை சம்பவத்துக்கு நீதிக் கோரியும், ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த ஐடி ஊழியர் கவின், கடந்த 27ம் தேதி கே.டி.சி நகரில் வைத்து ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்தும், ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பு மற்றும் இயக்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றாத விளம்பர திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் கவின் ஆணவப்படுகொலையை கண்டித்தும், ஆணவப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்காத விளம்பர திமுக அரசை கண்டித்தும் புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆணவ கொலையை தடுத்திட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர்.


Night
Day