கர்ப்பிணியை தாக்கிய காவலர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பெண்களை தாக்கிய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் சிவாஜி என்பவர் அதே பகுதியில் வசிக்கும் தனம், மதுமிதா, செவ்வந்தி ஆகிய மூன்று பெண்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி மற்றும் புகைப்படங்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றனர். அப்போது, அங்கு மதுபோதையில் பணியில் இருந்த காவலர் ராமன் மூன்று பெண்களையும், ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதையடுத்து, பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது 3 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

Night
Day