விண்வெளிக்கு புறப்பட தயாரான வீரர்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் ஃபால்கன்-9 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்த ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்ல தேர்வாகியுள்ளார். அவருடன் போலந்தைச் சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு உள்ளிட்ட 3 பேர் இந்த பயணத்தில் விண்வெளிக்கு செல்ல உள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 19ம் தேதி ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்சியம் 4 திட்டம் இன்று செயல்படுத்தப்படும் என நாசா அறிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12.01 மணிக்கு புளோரிடாவில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லவுள்ளனர். மொத்தம் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் இவர்கள், சுமார் 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொள்வார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Night
Day