கரூர்: பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஆஜரானவர் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் முகம் சிதைத்து கொல்லப்பட்ட ராமர் பாண்டியன் உடலை வாங்க மறுத்த அவரது ஆதரவாளர்கள், குற்றவாளிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தினர். மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே 2012ஆம் ஆண்டு குண்டு வீசிய வழக்கில், ராமர் எனும் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கு, கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. வழக்கின் முதல் நபரான ராமகிருஷ்ணன் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும், அரவக்குறிச்சி அடுத்த தடாகோவில் அருகே பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, காரில் வந்த கும்பல், அவர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளது. இதில், ராமர் உயிரிழந்த நிலையில், கார்த்திக் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, கொலையாளிகளை கைது செய்யும் வரை, ராமகிருஷ்ணனின் உடலை வாங்க மாட்டோம் என அவரது ஆதரவாளர்கள் கூறியதால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

varient
Night
Day