க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கன்னியாகுமரி அருகே தனியார் விடுதியில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவளம் பகுதியில் நீல் சாகர் என்ற தனியார் விடுதி உள்ளது. இந்த தனியார் விடுதியின் அறையில் உயர்ரக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சுந்தர மூர்த்தி தலைமையில் அந்த விடுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த விடுதியின் அறையில் 550க்கும் மேற்பட்ட உயர்ரக மது பாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அந்த விடுதியின் மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 6 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...