க்ரைம்
சொத்து பிரச்சனை: ஆயுதங்களுடன் தாக்கிய 7 பேர் கைது
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு அருகே மதுபோதையில் அக்காவை தாக்க முயன்ற மாமாவை சிறுவன் அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணிக்கவிளை பகுதியை சேர்ந்த விஜூ என்பவர், 2 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மதுவுக்கு அடிமையான விஜூ அடிக்கடி சௌமியாவிடம் தகராறில் ஈடுபட்டதால் சில நாட்களுக்கு முன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சௌமியா வீட்டிற்கு போதையில் சென்ற விஜூ மனைவியை அடிக்க பாய்ந்துள்ளார். இதனால் கோபமடைந்த சௌமியாவின் தம்பி அரிவாளை பிடுங்கி, மாமாவை துரத்தி சென்று வெட்டி கொன்றார். தகவலறிந்து சென்ற போலீசார் விஜூவின் உடலை மீட்டு, சிறுவனையும் கைது செய்தனர்.
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
வடமாநில கேட் கீப்பர்களால் மொழிப் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச?...