கன்னியாகுமரி: இருசக்கர வாகனம் குறுக்கே விழுந்ததால் தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது மோதி ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கொல்லாங்கோட்டை சேர்ந்த சசி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சூழால் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பிக்கப் வேன் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், எதிரே வந்த ஆட்டோவின் குறுக்கே விழுந்தது. இதில் ஆட்டோ தலைக்குபுற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதில் அருகில் நின்றிருந்த முதியவர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த விபத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. 

varient
Night
Day