என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கையில் 2013ம் ஆண்டு நிகழ்ந்த கைதியின் மரணம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1997-ம் ஆண்டு கீரனூர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.ஆக காவல் பணியை தொடங்கிய வெள்ளத்துரை, பல முக்கிய வழக்குகளில் இதுவரை 12 பேரை என்கவுண்டர் செய்துள்ளார். இவர் தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தார். 2013ம் ஆண்டு கொக்கி குமார் என அழைக்கப்படும் ராமு என்பவர் திருப்பாச்சேத்தி அருகே ஒருவரிடம் 500 ரூபாய் வழிப்பறி செய்ததாகவும், போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது குழியில் விழுந்து அடிபட்டு அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தொடர்புடையதாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 27 ஆண்டு கால காவல்துறை பணியில் இருந்து இன்றுடன் வெள்ளத்துரை ஓய்வு பெற இருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Night
Day